12ஆம் மாநில பொதுக்குழு மற்றும் ஆண்டு விழா.‌

கொரோனா பெருந் தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகள் நடத்தப்படாமல் இருந்த நமது மாநில பொதுக்குழு மற்றும் ஆண்டு விழா.‌ கொரோனா மற்றும் வழக்கு காரணத்தால் தொழில் முடக்கத்தில் இருந்து தற்பொழுது மீண்டு வந்து கொண்டிருக்கின்ற நம் சொந்தங்களை புத்துணர்வு ஏற்படுத்தி உற்சாகப்படுத்தும் விதமாக, *இவ் ஆண்டு விழா*.., பள்ளித் தேர்வுகள், விடுமுறை நாட்கள் விழாக்கள், அனைத்தையும் கணக்கில் கொண்டு.,அனைவருக்கும் ஏற்றார் போல், *அனைவரும் குடும்பமாக விடுமுறையை கழிக்கவும் எதுவாக*➡️ *திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி, மலைச் சுற்றுலா தளத்தில் இம்மாதம் , 29.05.2022. ‘மே’ கடைசி ஞாயிறு.* அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. *அதற்கான அழைப்பிதழ்கள் தயாராகி விட்டது*.****************************** இந்த ஆண்டு கூட்டத்தின் சிறப்புகள்: 👉⛱️ *சங்கத்தின் வளர்ச்சி,* ⛱️ *நம் சங்கத்திற்கு என்று பிரத்தியேக வலைதள தொலை காட்சி Separate YouTube Channel துவக்கம்.*

⛱️ *இந்தியாவிலே முதன் முறையாக Just dial, Indiamart, Sulekha.com, போன்று நமது டிஜிட்டல் பிரிண்டிங்* மற்றும் *சைன் போர்டு தொழிலுக்கு என்று நமது சங்க உறுப்பினர்களை மட்டும் உள்ளடக்கிய பிரத்தியேக வியாபார தேடுதல் மற்றும் விளம்பர செயலி Special Search Engine and Advertisement Application (App) அறிமுகம்*⛱️ *அனைவருக்கும் விபத்து காப்பீடு, போன்ற புதிய திட்டங்கள்*, ⛱️ *அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக மேலும் சில புதிய அறிவிப்புகள்* ⛱️ *வியாபார பெருக்கம், நிதி மேலாண்மை, போன்ற அறிவுரைகளை வழங்க நிபுணர்களுடன் கூடிய சிறப்பு கூட்டமாக இது இருக்கும்.*

இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக..
🔸 *கேரளா,*
🔸 *கர்நாடகா,*
🔸 *ஆந்திரா,*
🔸 *தெலுங்கானா,*


*போன்ற தென்னிந்திய மாநில டிஜிட்டல் சங்கங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அதன் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.* அதற்கான அழைப்பிதழ்கள் அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்.ஆகையால் அனைத்து மாநில, மாவட்ட, நிர்வாகிகள். உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ்களை வழங்கி.. *விழா மற்றும் பொதுக்குழுவில் தவறாமல் கலந்து கொள்ள செய்ய வேண்டிய ஏற்பாடுகளை இப்போதிருந்தே தொடங்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*மேலும் விவரங்களுக்கு மாநில நிர்வாகிகளை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.நன்றி..!

*- மாநிலத் தலைமை.*

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *